திமிரி சிறப்பு நிலை பேரூராட்சி அதிகாரிகளுக்கே டப் கொடுக்கும் மூன்று ஊழியர்கள்?
அதிகாரிகளை மிரட்டும் திமிரி  பேரூராட்சி ஊழியர்கள் 
               மேஸ்திரி) முத்துச்சாமி
.                பிட்டர் தியாகராஜன்

இராணிப்பேட்டை மாவட்டம், திமிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் 15. வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக பிட்டர்கள் தியாகராஜன், வெங்கடேசன் உள்ளனர். இவர்கள் இருவரும் காலையில் பேரூராட்சிக்கு வந்து அட்டென்டன்சையில் கையெழுத்து போட்டு விட்டு சென்று விடுவார்களாம். குடிநீர் புதிய கனெக்சன் வழங்குவதற்கு வீட்டிற்கு ஏற்றார் போல் வரி வசூலிப்பதாக கூறி ஒரு தொகையை ஆட்டையை போடுவது தியாகராஜன், வெங்கடேசன் இருவருக்கும் குடிநீர் கைவந்த கலையாம். இவர்கள் இருவரும் சரி வாரியாக பணிக்கு வருவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை இல்லாமலும், பல இடங்களில்  குடிநீர் பைப்கள் பழுதடைந்து இருப்பதால் பொதுமக்கள் கவுன்சிலர்களிடமும், பேரூராட்சி செயல் அலுவலரிடம் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இவர்களுக்கு நான் சளைத்தவன் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் (மேஸ்திரி) முத்துச்சாமி இருவரின் வழியே பின்பற்றி வருகிறாராம். இதனால் வார்டு முழுவதும் கால்வாய்களை சுத்தம் செய்யாமலும், குப்பைகளை வாராமலும் துர்நாற்றம் வீசுவதுவுடன் சுகாதார சீர்கேடுகள். நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளதாம். இவர்கள் மூவர் மீது பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குனர் ஜிஜாபாய் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவதை மறந்து அதிகாரிகள் வேலைகளை ஒழுங்காக ஏன் செய்யவில்லை என்று கேட்டால் இவர்களை ஜாதி ரீதியான பிரச்சினையை கையில் எடுத்து மிரட்டுவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் மூவர் மீது இனியாவது சம்பந்தப்பட்ட வேலூர் மாவட்டம். மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜிஜாபாய் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று திமிரி பேரூராட்சி மக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.