பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமாரின் பித்தலாட்டம். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை பாயுமா?
இராணிப்பேட்டை மாவட்டம். பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் சொந்த மாவட்டமான ராணிப்பேட்டை, சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் க.குமார் இவர். பனப்பாக்கம் பேரூராட்சி மக்களின் வரிப்பணத்தை போலி பில் போட்டு எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கலாம் என தனி கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். செயல் அலுவலர் க.குமார். தெருவிளக்கு பழுது ஏற்பட்டுள்ளது. போர் ரிப்பேர், பீளிச்சிங்பவுடர், பெனாயில், சுண்ணாம்பு வாங்கியது, விளக்கமாறு வாங்கியது, கொசு மருந்து புகையடித்தல், குப்பையை ஏற்றிச்செல்லும் டிராக்டர் பழுதுபார்த்தல். அலுவலக மூத்த ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பெயரில் பயணப்படி என (travel allowance) செலவு கணக்குகளை வரவு வைத்துக் தொகை கையாடல் என போலி பில் மூலம் அரசாங்கத்துக்கு கணக்கு காண்பித்து ஊழல் செய்து எப்படி எல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று தனி கவனம் செலுத்தி மக்கள் வரிப்பணத்தை வாரி சுருட்டி தனது உறவினர்களின் பெயரில் அசையா சொத்துக்களும், அசையும் சொத்துக்களையும் மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்து ராஜபோக வாழ்க்கை நடத்தி வருவதாக பனப்பாக்கம் பேரூராட்சியின் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

அதிலும் ஒரு படி மேலே போய் நாள்தோறும் செலவாகும் இதர செலவு கணக்கில் தினமும் ரூ.10,000 வரை சுருட்டி வருவதாக கூறப்படுகிறது. குடிநீர் குழாய் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் பித்தலாட்டம்,  வீட்டுமனை கட்ட பிளான் அப்ரூவல் வழங்குவதற்கு வீடுகளுக்கு ஏற்ப ரூ.10,000 முதல் 50,000 வரை லஞ்சம் வாங்குவதாக வீடுகட்ட அப்ரூவல் வாங்கியவர்கள் கூறுகின்றனர். அதேபோல் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களிடம் பிளாட்டுக்கு ஏற்ப 1லட்சம் முதல் 2‌.லட்சம் வரை தனக்கு லஞ்சமாக வாங்கிகொண்டு அனுமதி தருவதாக மக்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. 

இவர் வேலூர் மண்டல நிர்வாகம் பேரூராட்சிக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் காவேரிப்பாக்கம், திமிரி, கலவை, சோளிங்கர், ஆகிய பேரூராட்சிகளின் இளநிலை உதவியாளராகவும். ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பேரூராட்சியில் (பொறுப்பு) செயல் அலுவலராகவும், பென்னாத்தூர், பனப்பாக்கம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் இவர் எப்படி எல்லாம் பித்தலாட்டம் செய்து மக்கள் வரிப்பணத்தை வாரி சுருட்டலாம் என்று பாடம் பயின்றுவிட்டு வந்திருப்பார் போல் தெரிகிறது. பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் க.குமார் இவர்  பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில்.

பனப்பாக்கம் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், பேரூராட்சிகளின் முறைகேடுகளை ஆதாரபூர்வமாக வெளிச்சத்துக்கு கொண்டுவரும் சமூக ஆர்வலர் ஒருவர் மேற்கண்ட பல்வேறு தகவல்களை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டப்படி தகவல்கள் கேட்டு பதிலளிக்காமல் போகவே மேல்முறையீட்டு அலுவலரான வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு விண்ணப்பித்துள்ளார். அவரும் பதில் அளிக்காமல் கிடப்பில் போடவே சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு எழுத்துப்பூர்வமாக அனுப்பியுள்ளார்.

 பனப்பாக்கம் பேரூராட்சி மக்கள் பயன்பாடு என்னவென்று மேற்கண்ட தகவல்களை குறித்து யாராவது கேட்டால் பேரூராட்சி மன்ற தீர்மானங்கள்படியே நிர்வாகம் செயல்படுகிறது. மேற்கொண்டு நீங்கள் ஏதாவது தகவல் கேட்பதாக இருந்தால் தலைவரை கேளுங்கள் என்கிறாராம் செயல் அலுவலர் க.குமார். இவருக்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் தனக்கு பக்க பலமாக இருந்து வருவதால்தான் செயல் அலுவலர் குமாருக்கு இவ்வளவு தைரியம் என்கின்றனர். 

மற்ற பேரூராட்சிகளின் பணிபுரியும் செயல் அலுவலர்கள் பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் க.குமாருக்கு வேலூர் மண்டல பேரூராட்சிகளின் (நிர்வாகம்) உதவி இயக்குனர் ஆசி இருப்பதாக ஊழல் குற்றச்சாட்டுகள் தகவல் இருந்தும் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் நிர்வாகம் (ஏ.டி)., செயல் அலுவலர் குமார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு மாதம். மாதம் தீர்மானத்தின் போது ஒரு குறிப்பிட்ட (பர்சன்டேஜ் 20%) தொகையை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தகவல் உண்டாம்.
ஆகவே பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆவணங்களையும் வரவு செலவு கணக்குகளையும் ஆய்வு செய்வாரா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி.,
அல்லது பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மீது விசாரணை செய்து தமிழக பேரூராட்சியின் இயக்குனர் கிரண் குர்லா, இ.ஆ.ப., தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்? அல்லது இராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் பனப்பாக்கம் பேரூராட்சியில் பணியாற்றி வரும் குமார் மீது ஒரு கண் வைத்து நோட்டமிட்டு திடீரென பேரூராட்சியில் நுழைந்து சோதனையிட்டால் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளும் வெட்ட வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர் பேரூராட்சியின் விவரம் அறிந்தவர்கள்!