கடந்த 2009ம் ஆண்டு, மின் இணைப்பு பெற கட்டணம் செலுத்த மின் வாரியம் கடிதம் அனுப்பியது. மின் இணைப்பு பெறும் நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, பட்டா பெயர் மாறுதல் செய்ய, கோவிந்தாபுரம் கிராம நிர்வாக அலுவலரான திருமலைசாமி, (54வயது), என்பவரை அணுகினார். அவர், பட்டா மாறுதல் செய்ய 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். 2009 ஜன., 6ம் தேதியன்று, இதுகுறித்து மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். பின்னர் விஏஓ திருமலைசாமி லஞ்சப் பணத்தை பெறும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் திருமலைசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.
கிராம நிர்வாக அலுவலர் திருமலைசாமி லஞ்சம் பெற்றது உறுதியானதால், நீதிபதி செல்லதுரை நேற்று அளித்த தீர்ப்பில், திருமலைசாமிக்கு, 3 வருடம் சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.