இவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களுக்காக, பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து சென்றார்.
இதற்காக, பொன்னேரி வட்டாட்சியர் அலவலகத்தில் சம்பள பதிவேடு பிரிவில், மூன்றாம் நிலை வருவாய் உதவியாளராக பணிபுரிந்து வரும் ஷேக் முகம்மது, (27வயது), என்பவரை அணுகினார். அவர், ராமதாஸின் பணப்பலன்களுக்கான பதிவேடுகளை தயார் செய்து தருவதற்கு, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்.
லஞ்சம் தர விருப்பமில்லாத ராமதாஸ், இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்டு டி.எஸ்.பி., ராமச்சந்திர மூர்த்தி தலைமையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் பொன்னேரியில் முகாமிட்டனர்.
லஞ்ச ஒழிப்பு துறையினரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ராமதாஸிடம் கொடுத்து அனுப்பினர் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் சென்று, ஷேக் முகம்மதுவிடம், ரசாயனம் தடவிய, 3,000 ரூபாயை கொடுத்தார்.
லஞ்ச பணத்தை ராமதாஸிடமிருந்து பெறும்போது, அங்கு மறைவில் காத்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசார், ஷேக் முகம்மதுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரித்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.