நீண்ட நாட்களாக விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தப்பட்டிருந்ததால், புகழேந்தி, தண்டரை கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், (40வயது), என்பவரிடம் விசாரித்தார். அப்போது, 7,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து புகழேந்தி, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தின்படி ரசாயனம் தடவியபடி, 7,000 ரூபாயை, புகழேந்தியிடம் கொடுத்து அனுப்பினார்.
நேற்று காலை சுதாகரின் நண்பர் பழனி, (58வயது), என்பவரிடம் ரசாயன பொடி தடவப்பட்ட லஞ்சப் பணத்தை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுப் போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின், வி.ஏ.ஓ., சுதாகரையும் கைது செய்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.