இது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது உணவு இடைவேளையின் போது பள்ளி மாணவிகள் அங்கு சென்று, கை கழுவுவது வழக்கம் எனவும் அவ்வாறு சென்ற போது எங்களுக்குத் தெரியாமலேயே கழிவறையை அவர்கள் சுத்தம் செய்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வட்டார ஆரம்பக் கல்வி அலுவலரிடம் நமது நிருபர் குழு கேட்டபோது, இந்த தலைமையாசிரியர் மீது இதே போன்ற புகார் பலமுறை எழுந்துள்ளதால், தாங்கள் எச்சரித்ததாகவும் கழிவறை சுத்தம் செய்வதற்காகத் தனியாக பணியாள் அமைத்து அதற்கென சம்பளமும் கொடுப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும் இது போன்ற செயலில் தொடர்ந்து இவர் ஈடுபட்டுள்ளார் என்பதால் நாளைய தினம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.